(யூத்ஃபுல் விகடனில் 2009 அக்டோபர் மாதம் வெளியான கவிதைகள் இவை. )
-----------------------
பதில்
தினக்கடன் நாளாந்த
அலுவல் முடித்து
மதிய உணவைக் காவு கொடுத்து
தேத்தண்ணீர் மட்டுமருந்தி
இலக்கதனைத் எட்ட முயன்று
பரையேற்றம் செய்து காட்டி
கோப்புகள் மாற்றி
மின்னஞ்சல் எறிந்து
மடிக்கணிணி மூடி
அலுவலகக் கணிணி அணைத்து
விற்பனையே முதன்மையென்று
குறிவைத்துக் குதறும்மேலாளனைச் சபித்து
உளைவெடுக்கும் தலைகுனிந்து
பணிமனை வெளியேறி
வீடேக யத்தனிக்கும்
மழைநாளொன்றின்
அகால வேளையில்
பசியென்று கைநீட்டும்
சாலையோரக் கிழவிக்கு
என்னவென்று பதிலிறுக்க?
-----------------------
வாசனை
ஊதுபத்தி விற்பவன்
சென்று விட்ட பின்பும்
இன்னமும் மிச்சமிருக்கிறது
அவனின் ஏழ்மை வாசனை
-----------------------
உன்னழகு
நீ
அழகு பார்த்த
அந்தக் கணத்தில்..
உறைந்து போனது
என் வீட்டு
ஆளுயரக் கண்ணாடி.
இப்போது
வேறொன்றையும்
பிரதியெடுக்க
மறுக்கிறது அது.
கிட்ட நின்று
என் முகம் பார்க்க
யத்தனித்தால்
"ச்சீ! போடா"
என்கிறாய் நீ
கண்ணாடியுள்ளிருந்து..
-----------------------
என்னைக் கொஞ்சம்
கண்காட்சிக் கூட்டத்தில்
தொலைந்துபோய்
மீண்டும் கிடைத்த
குழந்தையாய் மாறிப்போகிறேன் நான்
எனைவிட்டு அங்குமிங்கும்
சுற்றியலைந்த உன் கண்கள்
என்மேல் வந்தமரும் போது
---------------------------------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
--------------------------------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்
--------------------------------
பதிலுக்கு பதிலில்லை.
ReplyDeleteவாசனை வலியாய்.
கவிதைகள் அருமை. வாழ்த்துக்கள்.
arumaiyaana kavithaigall.. vaazhthukkal thodarattum,,,,
ReplyDelete// ராமலக்ஷ்மி said...
ReplyDeleteபதிலுக்கு பதிலில்லை.
வாசனை வலியாய்.
கவிதைகள் அருமை. வாழ்த்துக்கள். //
"வாசனை" என் முதல் கவிதை. 2002 ல் கல்லூரிக்காலத்தில் எழுதியது.. கிடைத்த சிறு காகிதத்தில் குறித்து வைத்திருந்தேன். பின்னாளில் குமுதம் "வாசகர் கவிதை"யில் வெளியானது.
// krishna said...
ReplyDeletearumaiyaana kavithaigall.. vaazhthukkal thodarattum,,,, //
கண்டிப்பாக......... தொடரும் அன்புக்கு நன்றி..