Monday, September 27, 2010

ஆசைப் பூனை

(2010 செப்டம்பர் 13-ம் தேதியன்றைய உயிரோசை டாட் காமில் வெளியான கவிதை இது)
---------------------------------



















குறுக்கே போனால் அபசகுனம்,
ஒற்றை ரோமம் உதிர்ந்தால்
ஓராயிரம் பவுன்தான் மாற்று...
என்ற எச்சரிக்கைகள் மீறிய ஆசைதான்
பூனை வளர்க்க.
இடமில்லை, நேரமில்லை எனப்புலம்பி
அடுக்ககத்தில் பூனை வளர்க்க
அனுமதி தராத ஹவுஸ் ஓனரை
அவசரமாய்ச் சபித்தபடி,
"வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்"
ஈ பேப்பரில் பாரதியின்
கவிதை மட்டும் படித்துவிட்டு
பூனை ஆசைகள் மறைக்க முற்படினும்
டெஸ்க்டாப்பில் வாலாட்டி,
விண்டோஸின் ஸ்க்ரீன் பிறாண்டி,
அங்க சேஷ்டைகள் ஆயிரம் செய்து
அங்குமிங்கும் குதித்தோடும்
பப்பி அனுப்பிய
ஃப்ளோரசன்ட் பூனைக்குட்டிகள்
மூன்றை வைத்துத்தான்
கழிகிறது இப்போதைய பொழுது.
---------------------------------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
--------------------------------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்
--------------------------------

6 comments:

  1. உயிரோசையிலேயே ரசித்து வாசித்தாயிற்று:)! அருமை எனும் கருத்தை இங்கே பதிகிறேன்!

    ReplyDelete
  2. நன்றி... நிஜப்பூனைகளைப்பார்த்து ரொம்ப நாளாயிற்று...

    ReplyDelete
  3. வாடகை வீடு..!! சகிப்புத்தன்மையின் உச்சம்..!!
    நிதர்சனமான உண்மை..!!

    ReplyDelete
  4. // krishna said...
    super kutty //

    ஆஹா... பூனையைத் தானே சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  5. // சேலம் தேவா said...
    வாடகை வீடு..!! சகிப்புத்தன்மையின் உச்சம்..!!
    நிதர்சனமான உண்மை..!! //

    அன்பர் தேவா அவர்கள் சொந்த வீட்டுக்காரர் என அறிகிறேன். உண்மையா?

    ReplyDelete