Monday, February 14, 2011

ஃபீனிக்ஸ் ஜாதி (கவிதைகள்)


ஒரு வகையில்
ஃபீனிக்ஸ் ஜாதி தானோ
இந்தக் காதல்?
உதாசீனங்களைத் தாண்டியும்
இன்னும் இளமையாகவே
உயிர்த்தெழுந்து காத்திருக்கிறது
தனக்கான துணைக்காக.......
-------------------------------
எனக்கே எனக்கானவள் இவள்
என்றிருந்த போது
கவிதைகளால் குளிப்பாட்டினேன் அவளை..
அவள் ச்சோ...... ச்வீட் எனும்போது
கவிதை ச்சோ...... ச்வீட்டாவே இருந்தது..
அவளது விழியீர்ப்பு விசை
நோக்குமிடம் நானில்லை
என்று அறிந்த பிறகும்.....
அவளுடனான காதல்
இருக்கிறதா இல்லையாவென
யோசிக்கும் நேரத்திலும் வந்து
கவிதை கேட்கும் இவளை என்ன செய்வது?
-------------------------------
ரசிக்கப்படுகின்றன என்பதற்காகவே
உருவாக்கப்படுகின்றன பொய்கள்
அவள் ரசனைக்காக
என்னிடமிருந்து கொஞ்சம்...
பிழைத்துப்போகட்டும்
காதல்
-------------------------------
உற்சாகம் பொங்கும் மனதின்
மோன நிலை பிதற்றல்கள்
உண்மையல்லவென்று
பிதற்றுபவளுக்குத் தெரியாமலிருக்கலாம்..
செவிமடுப்பவன் செவிடனல்லவே.....
-------------------------------

6 comments:

  1. கவிதைகள் அனைத்தும் கொஞ்சம் பர்சனலாக (பர்சனலுக்காகவும்) எழுதப்பட்டவை... ஒரு பொதுமை-யை தேடுவோருக்கு கிடைக்கும் திருப்திக்கு கியாரண்டி...?

    ReplyDelete
  2. //ரசிக்கப்படுகின்றன என்பதற்காகவே
    உருவாக்கப்படுகின்றன பொய்கள்
    அவள் ரசனைக்காக
    என்னிடமிருந்து கொஞ்சம்...
    பிழைத்துப்போகட்டும்
    காதல்///
    மிக மிக பிடித்திருக்கிறது இந்த கவிதை :-)

    ReplyDelete
  3. // S.Sudharshan said...
    //ரசிக்கப்படுகின்றன என்பதற்காகவே
    உருவாக்கப்படுகின்றன பொய்கள்
    அவள் ரசனைக்காக
    என்னிடமிருந்து கொஞ்சம்...
    பிழைத்துப்போகட்டும்
    காதல்///
    மிக மிக பிடித்திருக்கிறது இந்த கவிதை :-) //

    சந்தர்ப்பம் கிடைக்குமிடத்தில் உபயோகித்துப்பாருங்களேன்... நான் ஆட்சேபிக்க மாட்டேன்..

    ReplyDelete
  4. cho sweeeeeeeeeeeeeeeeeeeeeeet!!!!

    ReplyDelete
  5. // Anonymous said...
    cho sweeeeeeeeeeeeeeeeeeeeeeet!!!!
    //

    யாருப்பா இந்த ச்சோ ச்வீட்ட்ட்ட்ட்......?

    ReplyDelete
  6. yosichu paarungalaen!......

    ReplyDelete