உன் அழகு நாசி விட்டு
வெளிவர மனமின்றி
உன்னுடனே தங்கிவிட்டது
நீ உள்ளிழுத்த காற்று...
"பணி மொழி வாலெயிறு ஊறிய நீர்"
தாகம் தீர்க்கும்
தன் கடன் மறந்து
வள்ளுவன் கூற்றாய்
உன் இதழ்க்கடை புகுந்தது நீர்.
நிலவினை முகத்திற்கும்
நட்சத்திரங்களை பற்களுக்கும்
தாரை வார்த்துவிட்டு
உன் கண்களில்
தஞ்சம் புகுந்தது ஆகாயம்..
வெம்மையைக் குறைத்து
உன் தேகமெங்கும் விரவி
இளஞ்சூடாய்க்
கதகதக்கிறது அக்னி...
தன்னுள் நீ கலக்கும்
கொடுமை வேண்டாமென்று
உன்னுள் கலந்து
ஊமையாகிப்போனது நிலம்...
கூடவே
நானும்...
கவிதை நன்று... தமிழ்மணத்தில் உங்க ஓட்டை கூட நீங்க போட மாட்டீங்களா...
ReplyDelete